லண்டன் கோர்ட்டு கைது செய்ய வாரண்ட் பிறப்பித்துள்ளதே? ‘நோ கமண்ட்ஸ்’ நிரவ் மோடி பதில்
லண்டன் கோர்ட்டு கைது செய்ய வாரண்ட் பிறப்பித்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் இல்லை என நிரவ் மோடி பதில் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு வழக்கில் தேடப்படும் குற்றவாளியான நகை வியாபாரி நிரவ் மோடி லண்டனுக்கு தப்பிச் சென்றார். சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. முறைகேடான பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை லண்டன் நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தது.
இதையொட்டி லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நிரவ் மோடிக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது. இந்த தகவல் அமலாக்கத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. எனவே நிரவ் மோடி விரைவில் கைது செய்யப்படுவார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும்போது ஜாமீன் பெறுவார். அதன்பின்னர் அவரை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான சட்டரீதியான நடவடிக்கைகள் தொடங்கும்.
இந்நிலையில் லண்டனின் அவரை கண்டுபிடித்த இந்திய தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளர், கைது செய்ய வாரண்ட், புதிய தொழில் தொடக்கம், வழக்கு தொடர்பான அடுத்த நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக தொடர்ந்து கேள்வியை எழுப்பியுள்ளார். வழக்கம்போல நிரவ் மோடி பதில் கிடையாது என கூறிவிட்டார். ஏற்கனவே அவருடைய இருப்பிடத்தை கண்டுபிடித்த லண்டனிலிருந்து வெளியாகும் தி கார்டியன், அவரிடம் பதில்களை பெற முயற்சித்தது, அப்போதும் பதில் இல்லை என்று கூறிவிட்டார்.
Related Tags :
Next Story