பிரதமர் மோடியின் நீண்ட கால குற்றச்சாட்டு பிரச்சாரத்திற்கு பிரியங்கா பதிலடி
பிரதமர் மோடியின் நீண்ட கால காங்கிரஸ் மீதான குற்றச்சாட்டு பிரச்சாரத்திற்கு பிரியங்கா காந்தி பதிலடியை கொடுத்துள்ளார்.
70 ஆண்டுகளாக ஒன்றுமே நடக்கவில்லை என்று முந்தைய காங்கிரஸ் ஆட்சியை தாக்கிப் பேசுவது பிரதமர் மோடியின் வழக்கமாகும். பிரதமர் மோடியின் இப்பேச்சை பா. ஜனதா தொண்டர்களும் ஆயுதமாக பயன்படுத்தி வந்தனர். இப்போது பிரதமர் மோடியின் நீண்ட கால காங்கிரஸ் மீதான குற்றச்சாட்டு பிரச்சாரத்திற்கு பிரியங்கா காந்தி பதிலடியை கொடுத்துள்ளார்.
பிரியங்கா பேசுகையில், “தேர்தலில் வாக்குறுதிகளை அளிப்பதற்கும் அதனை நிறைவேற்றுவதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. 70 ஆண்டுகளாக ஒன்றுமே நடக்கவில்லை மற்றும் வளர்ச்சியில்லை என்ற பிதற்றலுக்கும் காலாவதி தேதி உள்ளது. நீங்கள்தான் (பா.ஜனதா) 5 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கிறீர்கள், என்ன செய்து விட்டீர்கள்?” என்று பதில் கேள்வியை எழுப்பியுள்ளார்.
Related Tags :
Next Story