பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் ரூ.2,355 கோடிக்கான திட்டங்களுக்கு ஒப்புதல்
பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் ரூ.2,355 கோடிக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
புதுடெல்லியில், நாட்டின் பாதுகாப்பிற்கான ஆயுதங்களை கொள்முதல் செய்வதற்கான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது.
இதில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். அவரது தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தேஜ், தல்வார் மற்றும் சரயு வகை போர் கப்பல்களுக்கான கையெறி குண்டுகள் மற்றும் ஆயுதங்களை வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்திய கப்பற்படை மற்றும் கடலோர காவற்படைக்கான மிக பெரிய போர் கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை கட்டும் திட்டங்களுக்கான கப்பல் கட்டும் தளங்களை தேர்வு செய்வதற்கான புதிய கொள்கை வழிமுறைகளுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
வருகிற ஆண்டில் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்பந்தம் கோருவதற்கான நடைமுறைகளுக்கும் இந்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story