சிறப்பு ஒலிம்பிக் போட்டி:பதக்கங்களை குவித்த இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு


சிறப்பு ஒலிம்பிக் போட்டி:பதக்கங்களை குவித்த இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
x
தினத்தந்தி 21 March 2019 11:13 PM IST (Updated: 21 March 2019 11:13 PM IST)
t-max-icont-min-icon

அபுதாபியில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபியில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு ஒலிம்பிக்போட்டி நடைபெற்றது. இதில் மனநலம் மற்றும் வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விளையாட்டு போட்டியில் உலகம் முழுவதுமிலிருந்து 7 ஆயிரத்து 500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் இந்தியாவின் சார்பில் வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்திய விளையாட்டு வீரர்கள் 85 தங்கம் உட்பட 368 பதக்கங்கள் வென்றனர். 

இவர்களை டுவிட்டரில் பாராட்டிய பிரதமர் மோடி இன்று இந்தியாவிற்கு பெருமையான நாள் . அவர்களின் பலமும் சாதனைகளும் மில்லியன் கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Next Story