புல்வாமா தாக்குதல் சம்பவம் எதிரொலி: ஹோலி கொண்டாடாத தலைவர்கள்


புல்வாமா தாக்குதல் சம்பவம் எதிரொலி: ஹோலி கொண்டாடாத தலைவர்கள்
x
தினத்தந்தி 22 March 2019 4:45 AM IST (Updated: 22 March 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

ஹோலி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இருப்பினும், காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் பலியானதன் நினைவாக, சில தலைவர்கள் ஹோலி கொண்டாடவில்லை.

புதுடெல்லி, 

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய மந்திரிகள் வி.கே.சிங், ஹர்தீப் சிங் பூரி, மேற்கு வங்காள மாநில முதல்–மந்திரி மம்தா பானர்ஜி, டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் ஹோலி கொண்டாடவில்லை. ஆயினும், இவர்கள் மக்களுக்கு ஹோலி வாழ்த்துச் செய்தி வெளியிட்டு இருந்தனர்.


Next Story