காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் திக்விஜயசிங் போபால் தொகுதியில் போட்டி


காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் திக்விஜயசிங் போபால் தொகுதியில் போட்டி
x
தினத்தந்தி 24 March 2019 5:07 AM IST (Updated: 24 March 2019 6:03 AM IST)
t-max-icont-min-icon

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் நள்ளிரவு வெளியிடப்பட்டது.

புதுடெல்லி, 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜயசிங், மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியிலும், ரேணுகா சவுத்ரி தெலுங்கானா மாநிலம் கம்மம் தொகுதியிலும், நடிகர் ராஜ் பாப்பர் உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் சிக்ரி தொகுதியிலும் போட்டியிட உள்ளனர்.

இதேபோல் தமிழகம், குஜராத், மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநில நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலையும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் வெளியிட்டார்.


Next Story