சமாஜ்வாடி கட்சி நட்சத்திர வேட்பாளர் பட்டியல் வெளியீடு; முலாயம் சிங் பெயர் பட்டியலில் இல்லை
சமாஜ்வாடி கட்சி நட்சத்திர வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
லக்னோ,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. உத்தர பிரதேசத்தில் முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி மற்றும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி 37 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 38 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அக்கட்சியின் நிறுவனரான முலாயம் சிங், மக்களவை தேர்தலை முன்னிட்டு உத்தர பிரதேசத்தில் உள்ள 50 சதவீத தொகுதிகளை சமாஜ்வாடி கட்சியானது கூட்டணியில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சிக்கு கொடுத்துள்ளது வருத்தமளிக்கிறது என தொண்டர்கள் முன் பேசினார்.
இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி தனது நட்சத்திர வேட்பாளர்களின் பட்டியலை இன்று வெளியிட்டு உள்ளது. இதில் அகிலேஷ் யாதவ், ராம் கோபால் யாதவ், ஆசம் கான், டிம்பிள் யாதவ் மற்றும் ஜெயா பச்சன் ஆகியோர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் அக்கட்சியின் நிறுவன தலைவரான முலாயம் சிங் யாதவின் பெயர் இடம் பெறவில்லை.
Related Tags :
Next Story