டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து


டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து
x
தினத்தந்தி 24 March 2019 7:53 PM IST (Updated: 24 March 2019 7:53 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து

புதுடெல்லி,

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  இதனையடுத்து தகவல் அறிந்து 4 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு சென்றுள்ள வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த தீ விபத்தில் சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள திடீர் தீ விபத்தால் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

Next Story