மத்தியில் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பார் நிர்மலா சீதாராமன் பேச்சு
நாட்டின் பாதுகாப்புக்கும், ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பது அவசியம். அவர் மீண்டும் ஆட்சி அமைப்பது நிச்சயம்.
ஐதராபாத்,
ஐதராபாத்தில், பா.ஜனதா ஏற்பாட்டில், முன்னாள் ராணுவத்தினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-
நாட்டின் பாதுகாப்புக்கும், ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பது அவசியம். அவர் மீண்டும் ஆட்சி அமைப்பது நிச்சயம். பிரதமர் மோடி, தனது குடும்பத்துக்காக உழைக்கவில்லை. நாட்டுக்காக உழைக்கிறார். அதனால் அவர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். அதற்காக, தெலுங்கானா மக்கள், பா.ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டும்.
முன்னாள் ராணுவத்தினர் நலனுக்காக மத்திய அரசு எவ்வளவோ திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த தேசிய போர் நினைவுச்சின்னம், இந்த ஆட்சியில் பணி முடிந்து திறக்கப்பட்டது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான விமானப்படையின் தாக்குதலை ஒட்டுமொத்த நாடும் பாராட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால், சிலர் அதற்கு ஆதாரம் கேட்பது வெட்கக்கேடு. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story