“காங்கிரஸ் நிறைந்த பாரதம் உருவாக்கும் நேரம் வந்து விட்டது” சத்ருகன் சின்கா கருத்து

“காங்கிரஸ் நிறைந்த பாரதம் உருவாக்கும் நேரம் வந்து விட்டது” சத்ருகன் சின்கா கருத்து
x
தினத்தந்தி 25 March 2019 3:48 AM IST (Updated: 25 March 2019 3:48 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரசின் குடும்ப அரசியல் பற்றி மோடி குரல் எழுப்புகிறார். இது விரக்தியின் வெளிப்பாடு. முதலில், உங்கள் சொந்த கட்சியினரையும், கூட்டணி கட்சியினரையும் பாருங்கள். எல்லா கட்சியிலுமே குடும்ப அரசியல் இருக்கிறது.

புதுடெல்லி,

பீகார் மாநிலம் பாட்னா சாகிப் தொகுதி பா.ஜனதா எம்.பி.யாக உள்ள நடிகர் சத்ருகன் சின்காவுக்கு இம்முறை வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதையடுத்து, நேற்று அவர் பிரதமர் மோடியை தாக்கி ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து வெளியிட்டார். அவர் கூறியிருப்பதாவது:-

காங்கிரசின் குடும்ப அரசியல் பற்றி மோடி குரல் எழுப்புகிறார். இது விரக்தியின் வெளிப்பாடு. முதலில், உங்கள் சொந்த கட்சியினரையும், கூட்டணி கட்சியினரையும் பாருங்கள். எல்லா கட்சியிலுமே குடும்ப அரசியல் இருக்கிறது.

‘காங்கிரஸ் இல்லா பாரதம்’ உருவாக்கும் உங்கள் வாக்குறுதி என்ன ஆனது? மற்ற வாக்குறுதிகள் போல் காற்றோடு போய்விட்டதோ? கவலைப்படாதீர்கள். எல்லா இடத்திலும் காங்கிரஸ் நிறைந்த பாரதம் உருவாக்க நேரம் வந்து விட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story