மக்களவை தேர்தல் எதிரொலி: இந்திய - நேபாள எல்லைக்கு சீல்


மக்களவை தேர்தல் எதிரொலி:  இந்திய - நேபாள எல்லைக்கு சீல்
x
தினத்தந்தி 1 April 2019 4:38 PM IST (Updated: 1 April 2019 4:38 PM IST)
t-max-icont-min-icon

மக்களவை தேர்தலை முன்னிட்டு இந்திய-நேபாள எல்லைப் பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்தியா முழுக்க ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில்  மக்களவைத் தேர்தலை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் தார்சூலாவிலிருந்து காதிமா வரையிலும் உள்ள இந்திய-நேபாள எல்லைப் பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியா-நேபாள ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் சம்பாவாட்டில் நடைபெற்றது.  அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து உயரதிகாரிகள் கூறியதாவது:

''இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் தார்சூலாவிலிருந்து காதிமா வரை உள்ள நேபாள பகுதிகள் மூடப்பட உள்ளன. ஏப்ரல் 9-ம் தேதி நள்ளிரவில் இருந்து ஏப்ரல் 11 அன்று 8 மணி வரை 68 மணி நேரம் எல்லை முற்றிலுமாக சீல் வைக்கப்பட உள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த இரு நாடுகளைத் தவிர மூன்றாவது நாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும், நோயாளிகளுக்கும் இது பொருந்தாது என குறிப்பிட்டனர். 

உத்தரகாண்டில் உள்ள ஐந்து மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 11 அன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story