காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஆபத்தானது மற்றும் நிறைவேற்ற முடியாதது -அருண் ஜெட்லி கருத்து


காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஆபத்தானது மற்றும் நிறைவேற்ற முடியாதது -அருண் ஜெட்லி கருத்து
x
தினத்தந்தி 2 April 2019 10:36 PM IST (Updated: 2 April 2019 10:36 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஆபத்தானது மற்றும் நிறைவேற்ற முடியாதது என அருண் ஜெட்லி கருத்து தெரிவித்துள்ளார். #ArunJaitley #CongressManifesto

புதுடில்லி,

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியாகாந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று வெளியிட்டனர். காங்கிரஸின் தேர்தல் அறிக்கை நாடு முழுவதும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் மத்திய நிதி-மந்திரி அருண் ஜெட்லி செய்தியாளர்கள் சந்திப்பில், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பல நிறைவேற்ற  முடியாத அம்சங்கள் உள்ளன. நிறைவேற்றக்கூடியதாக அக்கட்சி தெரிவித்த வாக்குறுதிகள் நாட்டின் நலனுக்கு ஆபத்தானவை. காஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை நீர்த்து போக செய்ய முயற்சி செய்கிறது.

இந்தியாவை உடைப்பதே அக்கட்சியின் எண்ணம். பயங்கரவாதிகள், மாவோயிஸ்ட்களை பாதுகாப்பதே காங்கிரசின் திட்டம். தகுதியற்றவர்கள் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர். பயங்கரவாதிகளை ஆதரிக்கும் விதமாக அறிக்கை உள்ளது. 1741 ராணுவ வீரர்களின் பிரச்சினையை மத்திய அரசு சரிசெய்துள்ளது. சி.ஆர்.பி.சி.யில் நீதித்துறை மட்டுமே மாற்றம் கொண்டு வர முடியும். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக ராணுவத்தை செயல்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது. பயங்கரவாதத்தை நாங்கள் தோற்கடித்துள்ளோம். பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக தேசவிரோத சட்டத்தை மாற்ற முயற்சி செய்கிறது” என்று அவர் கூறினார்.

Next Story