ஒடிசா ஆற்றுப்பாலத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு


ஒடிசா ஆற்றுப்பாலத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 April 2019 12:30 AM IST (Updated: 2 April 2019 11:42 PM IST)
t-max-icont-min-icon

ஒடிசா ஆற்றுப்பாலத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

புவனேஸ்வரம்,

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் இருந்து டெல்லிக்கு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று சென்று கொண்டிருந்தது. கட்டாக் அருகே கத்ஜோடி ஆற்றின் பாலத்தில் அந்த ரெயில் சென்றது.

அப்போது திடீரென அந்த ரெயிலின் பி–3, பி–4 பெட்டிகள் தனியாக கழன்றன. ரெயில் மெதுவாக சென்றதால் விபத்தோ, பயணிகளுக்கு காயமோ ஏற்படவில்லை. எனினும் அந்த பெட்டிகளில் இருந்த பயணிகள் உயிர் பயத்தில் அலறினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இது பற்றி தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் அங்கு சென்று ஊழியர்கள் உதவியுடன் கழன்ற பெட்டியை ரெயிலுடன் இணைத்து கட்டாக் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த இரு பெட்டிகளையும் பாதுகாப்பு காரணமாக கழற்றி விட்டு, வேறு பெட்டிகளை இணைத்து அந்த ரெயில் மீண்டும் புறப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக உயர்மட்ட அளவிலான விசாரணைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.


Next Story