ரேபரேலி தொகுதி : சோனியா காந்திக்கு எதிராக பாஜக சார்பில் தினேஷ் பிரதாப் சிங் போட்டி


ரேபரேலி தொகுதி : சோனியா காந்திக்கு எதிராக பாஜக சார்பில் தினேஷ் பிரதாப் சிங் போட்டி
x
தினத்தந்தி 3 April 2019 7:30 PM IST (Updated: 3 April 2019 7:30 PM IST)
t-max-icont-min-icon

உ.பி. மாநிலத்தில் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் அவரை எதிர்த்து தினேஷ் பிரதாப்சிங் போட்டியிடுவார் என்று பாஜக தலைமை அறிவித்து உள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் வரும் 11-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதன் காரணமாக அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

இந்த நிலையில், உத்தரபிரதேசம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளராக தினேஷ் பிரதாப் சிங்கை பாஜக அறிவித்து உள்ளது.  தினேஷ் பிரதாப் சிங் முன்னாள் காங்கிரஸ் எம்எல்சி ஆவார். இவர் சமீபத்தில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்தியநாத் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்த நிலையில், அவருக்கு சோனியாவை எதிர்த்து போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதுபோல, அசம்கார் தொகுதியில் போட்டியிடும் அகிலேஷ் யாதவை எதிர்த்து போஜ்பூரி நடிகர் மற்றும் பாடகரான தினேஷ் லால் யாதவும், மெயின்புரி தொகுதியில் முலாயம் சிங் யாதவை எதிர்த்து பிரேம் சிங் ஷக்யாவும் போட்டியிடுகின்றனர்.

Next Story