நீங்களே போய் குட்டை தண்ணீரில் குதியுங்கள் காங்கிரசார் பற்றி அமித்ஷா கிண்டல்


நீங்களே போய் குட்டை தண்ணீரில் குதியுங்கள் காங்கிரசார் பற்றி அமித்ஷா கிண்டல்
x
தினத்தந்தி 4 April 2019 3:00 AM IST (Updated: 4 April 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

நீங்களே போய் குட்டை தண்ணீரில் குதியுங்கள் என்று காங்கிரசார் பற்றி அமித்ஷா கிண்டல் செய்துள்ளார்.

உதம்பூர்,

காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-

காங்கிரசார் தேர்தல் அறிக்கையில் ஆயுதப்படைகளின் சட்டம் மறுஆய்வு செய்யப்படும், தேசவிரோத சட்டம் திரும்பப் பெறப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர்களும் வெட்கப்பட வேண்டும். நீங்களே போய் குட்டை தண்ணீரில் குதியுங்கள். ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகார சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா? அவர்கள் பகல் கனவு காண்கிறார்கள். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பயங்கரவாதிகளையும், தேச விரோத சக்திகளையும் ஊக்குவிப்பதாக உள்ளது.

இது நரேந்திர மோடி அரசு, யாரும் ஆயுதப்படைகளின் அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்ய முடியாது. நாங்கள் எல்லையை பாதுகாக்கும் பாதுகாப்பு படைகளின் பின்னால் பாறை போல நிற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story