முதல் முறையாக ஓட்டு அளிக்கப்போகும் இளைஞர்களிடம் அரசியல் ஆர்வம் இல்லை ஆய்வில் தகவல்
முதல் முறையாக ஓட்டு அளிக்கப்போகும் இளைஞர்களிடம் அரசியல் ஆர்வம் இல்லை என ஆய்வில் தெரிய வந்து உள்ளது
புதுடெல்லி
நாடாளுமன்ற தேர்தல் வருகிற 11-ந் தேதி முதல், அடுத்த மாதம் (மே) 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது. மே - 23 ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடும் பணிகளில் தேசிய கட்சிகளான பா.ஜனதாவும், காங்கிரசும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. இதில் தொடக்க கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளுக்கான பட்டியலை இரு கட்சிகளும் வெளியிட்டு வருகின்றன.
மொத்த வாக்காளர்களின் அடிப்படையில் இது 2014-ல் 814.5 மில்லியனிலிருந்து 2019-ல் 900 மில்லியனாக அதிகரித்துள்ளது. இது 10.5 சதவீதம் அதிகரிப்பு ஆகும். இருப்பினும், 18-19 வயதில் உள்ள வாக்காளர்கள் அல்லது முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் 2014 ல் 23 மில்லியனாக இருந்து தற்போது 2019-ல் 15 மில்லியனாக குறைந்து உள்ளது. இது 30 சதவீதம் குறைவு ஆகும்.
1951-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது 173 மில்லியின் வாக்காளர்கள் இருந்தனர். 2004 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர்களின் எண்ணிக்கை 672 மில்லியனாகவும், 2014-ல் 834 மில்லியனாகவும் அதிகரித்தது. இப்போது கிட்டத்தட்ட 900 மில்லியன் வாக்காளர்கள் உள்ளனர். 15 மில்லியன் வாக்காளர்கள் 18 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர்.
2019 பொதுத் தேர்தலில் 81 மில்லியன் இளைஞர்கள் வாக்களிக்க உள்ளதாக சமீபத்திய ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. இவர்கள் 282 பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என உறுதியாக கூற முடியும்.
பழையவர்களைப் போலல்லாமல், முதல் முறையாக வாக்களிக்கும் தன்மை உடையவர்கள் அரசியல் அணுகுமுறைகளில் குறைபாடு உள்ளவர்கள் என்று கூறப்படுகிறது.
இது குறித்து பியூ ஆராய்ச்சி மையம் யூஜோவ்-மின்ட் மில்லினியல் என்ற ஆய்வு ஒன்றை நடத்தியது 180 நகரங்களில் 5,000 க்கும் அதிகமானோரிடம் இந்த சர்வே நடத்தப்பட்டது.இந்த ஆய்வு 1981 மற்றும் 1996 க்கு இடையில் பிறந்தவர்கள் 2018 ஆம் ஆண்டில் 22 முதல் 37 வயது வரை உள்ளோரிடம் நடத்தப்பட்டது.
ஆய்வில் இந்திய இளைஞர்களிடையே அரசியல் அலட்சியம் உள்ளது என கண்டறியபட்டது. டிஜிட்டல் தளங்களில் செய்திகளைப் பெற விரும்புகிறார்கள், சமூக ஊடகங்களிலும், ஆன்லைன் கடைகளிலும் தங்கள் ஓய்வு நேரத்தை செலவிடுகிறார்கள் என தெரிய வந்து உள்ளது.
இளைஞர் மனப்பான்மையில் பாலின செல்வாக்கு வலுவானது, தெளிவானது. உதாரணமாக, சில பெண்களுக்கு ஆண்களை விட அரசியலில் ஆர்வமாக உள்ளனர் என தெரியவந்து உள்ளது.
2016 ஆம் ஆண்டில் கொனாட் அடெனவர் ஸ்டிஃபெக்ட் (KAS) எடுத்த இந்தியாவின் இளைஞர்களின் கவலையும் அபிலாஷைகளும் என்ற ஆய்வு நடத்தப்பட்டது. இது 19 மாநிலங்களில் 15 மற்றும் 34 வயதிற்கு இடையில் 6,000 க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்டது. ஆய்வில் இந்திய இளைஞர்களுக்கு அரசியலில் "எந்தவொரு ஆர்வமும் இல்லை" என்றும் 18 சதவிகிதம் பேருக்கு மட்டுமே "சிறிய ஆர்வம்" உள்ளது. என கண்டறியப்பட்டது.
Related Tags :
Next Story