பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது குறைப்பா?
தொலைத்தொடர்பு துறையில் ஜியோ வருகைக்கு பிறகு பல செல்போன் நிறுவனங்கள் ஆட்டம் கண்டன.
புதுடெல்லி,
தொலைத்தொடர்பு துறையில் ஜியோ வருகைக்கு பிறகு பல செல்போன் நிறுவனங்கள் ஆட்டம் கண்டன. இதில் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனமும் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. ஊழியர்களுக்கு மாத சம்பளத்தை கூட குறிப்பிட்ட தேதியில் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களின் பணி ஓய்வுபெறும் வயது குறைக்கப்படும் என்றும், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலைநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் செய்திகள் வெளியாகின.
இதை பி.எஸ்.என்.எல். நிறுவனம் திட்டவட்டமாக மறுத்தது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பணி ஓய்வுபெறும் வயது குறைப்பு, ஊழியர்கள் வேலைநீக்கம் ஆகிய செய்திகள் தவறானவை. இதை முற்றிலும் மறுக்கிறோம். அப்படி ஒரு முடிவையும் பி.எஸ்.என்.எல். வாரியம் எடுக்கவில்லை. அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இது போன்ற செய்திகள் வெளியாகி உள்ளன என தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story