இந்திய மக்களுக்காக பணியாற்றுகிறேன், இந்துக்கள், இஸ்லாமியர்களுக்கு கிடையாது - பிரதமர் மோடி


இந்திய மக்களுக்காக பணியாற்றுகிறேன், இந்துக்கள், இஸ்லாமியர்களுக்கு கிடையாது - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 5 April 2019 2:45 PM IST (Updated: 5 April 2019 2:45 PM IST)
t-max-icont-min-icon

நான் இந்திய மக்களுக்காகவே பணியாற்றுகிறேன், இந்துக்களுக்காகவோ, இஸ்லாமியர்களுக்காகவோ பணியாற்றவில்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

2019 தேர்தலுக்கு மத்தியில் பிரதமர் மோடி ஏபிபி செய்தி சேனலுக்கு பேட்டியளித்து பேசியுள்ளார். 

பா.ஜனதா அரசின் மீது இஸ்லாமியர்கள் நம்பிக்கை வைக்காதது ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளித்து பேசியுள்ள பிரதமர் மோடி, இஸ்லாமியர்களுக்காக நான் எதுவும் செய்யவில்லை. அதேபோல் இந்துக்களுக்காகவும் தனியாக நான் எதுவும் செய்யவில்லை. 2022-க்குள் எல்லா குடும்பத்திற்கும் வீடு கிடைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்காகும்.  இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியர்களாக இருந்தாலும் மின்சாரம் கிடைக்கும். என்னுடைய அரசில் மதத்திற்கு இடம் கிடையாது. சிலர் வாக்குகளை கைப்பற்றும் முயற்சியில் இஸ்லாமியர்களின் பாதுகாப்பு என்பதை  பயன்படுத்துகின்றனர் என கூறியுள்ளார். 

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பேசுகையில், நான் மட்டும் கிடையாது, அனைவரும் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதில் தீர்வு காண சுப்ரீம் கோர்ட்டு முடிவுக்கு நாம் காத்திருக்க வேண்டும் என்றார். 

Next Story