மோடி, தனது குருவான அத்வானியை புறக்கணிப்பதுதான் இந்து மத கலாசாரமா? ராகுல் காந்தி கேள்வி

மோடி, தனது குருவான அத்வானியை புறக்கணிப்பதுதான் இந்து மத கலாசாரமா? ராகுல் காந்தி கேள்வி
x

மோடி, தனது குருவான அத்வானியை புறக்கணிப்பதுதான் இந்து மத கலாசாரமா? ராகுல் காந்தி கேள்வி

சந்திராபூர், 

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானிக்கு சீட் வழங்கப்படவில்லை. இது பா.ஜனதாவினர் மட்டுமின்றி எதிர்க்கட்சிகளிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி  வெளிப்படையாகவே பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பினார்.

மராட்டியத்தின் சந்திராபூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் இது தொடர்பாக அவர் பேசும்போது, ‘இந்து மதம் பற்றி பா.ஜனதா பேசி வருகிறது. இந்து மதத்தில் குரு உயர்ந்தவர். அது குரு–சிஷ்ய கலாசாரத்தை சிறப்பாக எடுத்துரைக்கிறது. பிரதமர் மோடியின் குரு யார்? அத்வானி. அவரை மோடி புறந்தள்ளி விட்டார். இதுதான் இந்துமத கலாசாரமா?’ என்று கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்ற தேர்தல் கொள்கைகளுக்கு இடையேயான மோதல் என்று கூறிய ராகுல் காந்தி, இதில் மோடியின் வெறுப்பு, கோபம் மற்றும் பிரிவினை சித்தாந்தங்களை காங்கிரஸ் கட்சியின் சகோதரத்துவம், அன்பு, நல்லிணக்க சித்தாந்தம் வெற்றி கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

Next Story