ஆந்திர சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடு மகனுக்கு காத்திருக்கும் சவால்


ஆந்திர சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடு மகனுக்கு காத்திருக்கும் சவால்
x
தினத்தந்தி 6 April 2019 4:30 AM IST (Updated: 6 April 2019 2:26 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திர சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடு மகன் நர லோகேசுக்கு பெரும் சவால் காத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.

மங்கலகிரி, 

ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டசபைக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் ஆளும் தெலுங்குதேசம் கட்சித்தலைவரும், முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் (வயது 36) குண்டூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மங்கலகிரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கி இருக்கும் அவரை எதிர்த்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. அல்ல ராமகிருஷ்ண ரெட்டி போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் இவர் தெலுங்குதேசம் கட்சி வேட்பாளரை வெறும் 12 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தார். இந்த தொகுதியில் இவர்கள் இருவருக்கும் இடையேதான் நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது.

இந்த தொகுதியில் நர லோகேசுக்கு பெரும் சவால் காத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர். ஏனெனில் நெசவாளர்களை அதிகமாக கொண்ட இந்த தொகுதியில் கடந்த 1985-ம் ஆண்டுக்கு பிறகு தெலுங்குதேசம் கட்சி ஒருபோதும் வெற்றி பெற்றதில்லை.

ஆனால் இந்த தேர்தலில் வெற்றி பெற்று இந்திய அரசியலில் புதிய பாதையை வகுப்பதற்கே இந்த தொகுதியில் போட்டியிடுவதாக நர லோகேஷ் கூறியுள்ளார். இதற்கு, மாநில அரசின் வளர்ச்சி திட்டங்கள், உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் தனியார் துறையில் 3 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகிய 3 அம்சங்கள் கைகொடுக்கும் என தெரிவித்தார்.

Next Story