ராணுவ முன்னாள் துணை தளபதி பா.ஜனதாவில் இணைந்தார்
ராணுவத்தில் முன்பு துணை தளபதியாக இருந்தவர் சரத்சந்த். இவர் 1979–ம் ஆண்டு கர்வால் ரைபிள்ஸ் படையில் சேர்ந்தார்.
புதுடெல்லி,
ராணுவத்தில் முன்பு துணை தளபதியாக இருந்தவர் சரத்சந்த். இவர் 1979–ம் ஆண்டு கர்வால் ரைபிள்ஸ் படையில் சேர்ந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ராணுவத்தில் துணை தளபதியாக இருந்து ஓய்வு பெற்றார். இவர், நேற்று மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார்.
அப்போது அவர், ‘‘இன்று உலகம் இருக்கும் சூழ்நிலையில் வலிமையான தலைமை தேவைப்படுகிறது. அந்த தலைமையை பிரதமர் மோடியால் மட்டுமே கொடுக்க முடியும். அவருடைய தலைமை பொறுப்பு என்னை மிகவும் கவர்ந்ததால்தான் தற்போது பா.ஜ.க.வில் இணைந்து உள்ளேன்’’ என்று கூறினார்.
Related Tags :
Next Story