மகாராஷ்டிரா ரெயில் நிலையத்தில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி
மகாராஷ்டிராவில் ரெயில் நிலையத்தில் கர்ப்பிணி ஒருவர் குழந்தை பெற்றெடுத்து உள்ளார்.
மகாராஷ்டிராவின் அம்பிவாலி பகுதியில் இருந்து குர்லா நோக்கி செல்லும் ரெயிலில் இஷ்ரத் ஷேக் என்ற கர்ப்பிணி பயணம் செய்துள்ளார். அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.
அவரை ரெயில்வே பாதுகாப்பு படை பெண் போலீசார் உடனடியாக தானே ரெயில் நிலையத்தில் உள்ள ஒரு ரூபாய் கிளினிக்கிற்கு கொண்டு வந்துள்ளனர். இதன்பின் அங்கு அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இதுபற்றி ஒரு ரூபாய் கிளினிக்கின் தலைமை செயல் அதிகாரி ராகுல் குலே கூறும்பொழுது, தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமுடன் உள்ளனர். பயணிகளுக்கு ஆபத்துகால சிகிச்சை அளிக்க பல ரெயில்வே நிலையங்களில் எங்களது கிளினிக்குகள் செயல்படுகின்றன. இதனை செயல்படுத்த வாய்ப்பு வழங்கிய ரெயில்வே நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story