பிரியங்கா வாரணாசியில் போட்டியிடுவது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கவில்லை - ராஜீவ் சுக்லா
பிரியங்கா வாரணாசியில் போட்டியிடுவது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கவில்லை என ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தியை களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரசார் மத்தியில் உள்ளது. ரேபரேலியில் தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரியங்காவிடம் தேர்தலில் போட்டியிட கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது வாரணாசியில் வேண்டாமா? என்ற பதில் கேள்வியை பிரியங்கா கேட்டார். எனவே பிரியங்கா வாரணாசியில் போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில் பிரியங்கா வாரணாசியில் போட்டியிடுவது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கவில்லை என ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா போட்டியிடுவது தொடர்பாக முடிவு எடுக்கப்படவில்லை. பிரியங்காவின் தலைமையில் காங்கிரஸ் நாடாளுமன்றத் தேர்தலிலும், 2022 சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றிப்பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story