மத்தியில் அரசு அமைப்பதில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் - மம்தா பானர்ஜி நம்பிக்கை
மத்தியில் அரசு அமைப்பதில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் என மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே போட்டி பிரசாரம் காணப்படுகிறது.
பரோபிஷாவில் பிரசாரம் மேற்கொண்ட மம்தா பானர்ஜி, நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என்றால் முதலில் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டியது அவசியமாகும்.
தேர்தலுக்குப் பிறகு மத்தியில் புதிய அரசை அமைப்பதில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கும். பிரதமர் மோடி ஒரு பொய்யர். 5 ஆண்டுகளாக பொய் மட்டுமே பேசிவருகிறார். 2014 தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. சொந்த மனைவியை கவனிக்க முடியாதவர் எப்படி நாட்டு மக்களை கவனிக்கப் போகிறார்? தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை சட்டத் திருத்தம் மூலம் இந்த நாட்டின் சட்டப்பூர்வ குடிமக்களை அகதிகளாக மாற்ற பா.ஜனதா முயற்சி செய்கிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
Related Tags :
Next Story