மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமா? - பாகிஸ்தான் புகாரை இந்தியா நிராகரித்தது
மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறிய பாகிஸ்தானின் புகாரை இந்தியா நிராகரித்தது.
புதுடெல்லி,
பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெக்மூத் குரேஷி நேற்று அங்குள்ள முல்தான் நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், வருகிற 16-ந் தேதி முதல் 20-ந் தேதிக்குள் தங்கள் நாட்டின் மீது இந்தியா மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறினார்.
ஆனால் இந்த புகாரை இந்தியா நிராகரித்து உள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் விடுத்துள்ள அறிக்கையில், பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி கூறி இருப்பது அபத்தமானது மட்டுமின்றி பொறுப்பற்றதாகவும் உள்ளது என்று கூறி உள்ளார். மேலும், ஷா மெக்மூத் குரேஷி அவ்வாறு கூறியது மக்களை ஏமாற்றும் வித்தை என்றும், இந்தியா மீது தாக்குதல் நடத்துமாறு பயங்கரவாதிகளை தூண்டி விடுவது போல் உள்ளது என்றும் அவர் கூறி இருக்கிறார்.

Related Tags :
Next Story