விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும் - பாஜக தேர்தல் அறிக்கை


விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும்  - பாஜக தேர்தல் அறிக்கை
x
தினத்தந்தி 8 April 2019 12:45 PM IST (Updated: 8 April 2019 3:24 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. #MainBhiChowkidar

புதுடெல்லி,

மக்களவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி, தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் வெளியிட்டனர்.

48 பக்கங்கள் அடங்கிய பாரதீய ஜனதா  தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ.25 லட்சம் கோடியில் திட்டங்கள்  செயல்படுத்தப்படும்.

* விவசாய கடனுக்கு வட்டி கிடையாது. 5 ஆண்டுகள் வரை விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

* தேசிய பாதுகாப்புக்கு பாஜக அரசு முன்னுரிமை தரும்.

* விவசாயிகளுக்கு வட்டியில்லா கிரடிட் கார்டு வழங்கப்படும்.

*  2022 ஆம் ஆண்டுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் வீடு கட்டித்தரப்படும்.

* நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும், நாங்கள் பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனாவை நிறைவேற்றுவோம். 

* 60 வயதிற்கு மேற்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியத்தை உறுதி செய்வோம்.

* 2025 ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர்கள் மற்றும் 2032 ஆம் ஆண்டில் 10 டிரில்லியன் டாலர்கள் பொருளாதாரம் இருக்கும்.

* உள்கட்டமைப்பு துறையில் ரூ.100 லட்சம் கோடி முதலீடு.

* மத நம்பிக்கையை பாதுகாக்க அரசியல் சட்ட ரீதியான நடவடிக்கை.

*  நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு.

*  சபரிமலை விவகாரத்தில் மத நம்பிக்கைகள், சடங்குகளை உச்சநீதிமன்றம் முன் எடுத்துரைத்து, அவற்றை பாதுகாப்போம்.

*  விவசாயிகளுக்கு 6 ஆயிரம் உதவித்தொகை.

*  நதிகள் இணைப்பிற்கு தனி ஆணையம் அமைக்கப்படும்.

* நாடு முழுவதும் புதிதாக 75 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும்.

* தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து விரைவாக ராமர் கோயில் கட்ட முயற்சி எடுப்போம்.

* ஜிஎஸ்டி நடைமுறைகள் எளிதாக்கப்படும்.

* இஸ்லாமிய பெண்களின் உரிமையை நிலைநாட்டும் முத்தலாக் சட்டம் நிறைவேற்றப்படும்.

* பொதுசிவில் சட்டம் கொண்டுவரப்படும்.

* சிறு விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டம் அனைவருக்கும் விரிவுபடுத்தப்படும்.

* விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Next Story