ஜபல்பூரில் நடந்த விழாவில் ‘தனுஷ்’ பீரங்கிகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு


ஜபல்பூரில் நடந்த விழாவில் ‘தனுஷ்’ பீரங்கிகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 10 April 2019 5:00 AM IST (Updated: 10 April 2019 3:22 AM IST)
t-max-icont-min-icon

மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பீரங்கி தொழிற்சாலையில் பீரங்கிகள் ராணுவத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

ஜபல்பூர், 

தளவாட தொழிற்சாலை வாரியம் (ஓ.எப்.டி.) இயக்குனர் சவுரவ் குமார் கொடியசைத்து வழியனுப்பிவைத்தார். 

ராணுவ தேவைக்காக 114 தனுஷ் பீரங்கிகளை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகமும், தளவாட தொழிற்சாலை வாரியத்துக்கு வழங்கியுள்ளன. அதில் முதல் கட்டமாக 6 பீரங்கிகள் தயாரிக்கப்பட்டு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

 உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் பீரங்கிகள் என்ற பெருமையை ‘தனுஷ்’ ரக பீரங்கிகள் பெற்றுள்ளன. இந்த பீரங்கிகள் 38 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டவை.


Next Story