தெலுங்கானாவில் மண் சரிந்து விபத்து : தொழிலாளர்கள் 11 பேர் பலி
தெலுங்கானாவில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டத்தில் 11 கூலித் தொழிலாளர்கள் பலியானார்கள்.
ஐதராபாத்
தெலுங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டம் திலேர் கிராமத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் எடுத்தபோது மண் சரிந்தது. இதில் அங்கு வேலை பார்த்து கொண்டு இருந்த தொழிலாளர்கள் மண்ணிற்குள் புதைந்தனர். இந்த மண் சரிவில் பெண்கள் உள்பட 11 கூலித்தொழிலாளர்கள் பலியானார்கள்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரிந்தவர்கள் ஆவார்கள்.
தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ், "துரதிருஷ்டவசமாக" நடந்த இந்த சம்பவம் தொடர்பாக ஆழ்ந்த அதிர்ச்சி மற்றும் வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.
Related Tags :
Next Story