விஷு பண்டிகையை ஒட்டி சபரிமலையில் நடை திறப்பு
மலையாள புத்தாண்டான விஷு பண்டிகையை ஒட்டி இன்று மாலை சபரிமலையில் நடை திறக்கப்பட்டது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் ஓணம் பண்டிகையை போன்று விஷூ பண்டிகையையும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். இதையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும். சபரிமலை ஐயப்பன் கோவிலிலும் விஷூ பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டுக்கான விஷூ பண்டிகை பண்டிகையை ஒட்டி இன்று மாலை சபரிமலையில் நடை திறக்கப்பட்டது. வரும் 19-ம் தேதி வரை நடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷூ பண்டிகையை ஒட்டி சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் முக்கிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் பம்பைக்கு இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story