குஜராத்தில் காங்கிரசில் இருந்து முக்கிய தலைவர் விலகல்


குஜராத்தில் காங்கிரசில் இருந்து முக்கிய தலைவர் விலகல்
x
தினத்தந்தி 11 April 2019 4:15 AM IST (Updated: 11 April 2019 3:14 AM IST)
t-max-icont-min-icon

குஜராத்தின் படான் மாவட்டத்துக்கு உட்பட்ட ரதன்பூர் தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்பேஷ் தகோர்.

ஆமதாபாத், 

மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கி வரும் இவர், கடந்த 2017–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போதுதான் காங்கிரசில் சேர்ந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குஜராத் சத்திரிய தகோர் சேனா என்ற அமைப்பை நடத்தி வந்த அல்பேஷ், நாடாளுமன்ற தேர்தலில் படான் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவருக்கு சீட் கொடுக்காமல் முன்னாள் எம்.பி. ஜக்திஷ் தகோரை வேட்பாளராக கட்சி அறிவித்தது. இதனால் மாநில கட்சித்தலைமை மீது அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து நேற்று அவர், காங்கிரசில் இருந்து விலகினார். முன்னதாக அல்பேஷின் சத்திரிய தகோர் சேனாவும், காங்கிரசுடனான உறவை முறித்துக்கொள்ள முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story