வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க சென்றவர்களை விரட்டிய ராணுவம்


வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க சென்றவர்களை விரட்டிய ராணுவம்
x
தினத்தந்தி 11 April 2019 3:27 PM IST (Updated: 11 April 2019 3:27 PM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் அடையள அட்டையில்லாமல் வாக்களிக்க முயற்சி செய்தவர்களை ராணுவம் விரட்டியது.

20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தல் முதல்கட்டமாக நடைபெற்று வருகிறது. பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடக்கிறது. உத்தரபிரதேச மாநிலம் ஷாமிலியில் சிலர் வாக்காளர் அடையாள அட்டையெதுவும் இல்லாமல் வாக்களிக்க முயற்சி மேற்கொண்டனர். அவர்களை ராணுவம் விரட்டியடித்தது. இதுதொடர்பாக மாவட்ட மாஜிஸ்திரேட் பேசுகையில், சிலர் வாக்காளர் அடையாள அட்டையில்லாமல் அத்துமீறி வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்களிக்க முயற்சி செய்துள்ளனர். அவர்களை எல்லைப் பாதுகாப்பு படையினர் வானில் துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்தனர். இதனால் சில மணிநேரம் வாக்குப்பதிவு தாமதமாகியது. பின்னர் நிலைமை சீராகியதும் வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது என குறிப்பிட்டார்.

Next Story