நாடு முழுவதும் 20 மாநிலங்களில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது
நாடு முழுவதும் 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவை தொகுதிகளுக்கு நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது
புதுடெல்லி,
நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று தொடங்கி அடுத்த மாதம் 19ந்தேதி வரை ஏழு கட்ட தேர்தல் நடத்தப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23ந்தேதி நடைபெறும். இதில், முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் முதல்கட்ட ஓட்டுப்பதிவு இன்று துவங்கி நடைபெற்றது.
இந்நிலையில் இன்று நாடு முழுவதும் 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவை தொகுதிகளுக்கு நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
மாலை 5 மணி நிலவரப்படி மேகாலயாவில் - 62% தெலங்கானாவில் - 60.57% உத்தரபிரதேசம் - 59.77% பீகார்: 50.26% தெலுங்கானா: 60.57% மேகாலயா: 62% உத்தரப் பிரதேசம்: 59.77% மணிப்பூர்: 78.20% லட்சத்தீவுகள்: 65.9% அசாம்: 68% வாக்குப்பதினாது.
காஷ்மீர், மேற்கு வங்காளம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயாவில் தலா 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
மிசோரம், நாகலாந்து, சிக்கிமில் தலா ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு முன்னெடுக்கப்பட்டது.
சட்டீஷ்கர், மணிப்பூர், திரிபுரா மாநிலங்களிலும், லட்சத்தீவுகள் மற்றும் அந்தமான் நிகோபார் ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் தலா 1 மக்களவை தொகுதி மட்டுமே உள்ள நிலையில், அங்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இவ்வாறு, ஆயிரத்து 279 வேட்பாளர்களுடன் முதற்கட்ட தேர்தல் எதிர்கொண்ட 91 மக்களவைத் தொகுதிகளில், காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரு சில தொகுதிகளில், மாலை 5 மணிக்கே வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
முதற்கட்டமாக நடைபெற்ற வாக்குப்பதிவில், சராசரியாக 65 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story