கணவர் மரணம் குறித்து விசாரணை: சாதிக் பாட்சா மனைவி, ஜனாதிபதியிடம் புகார்
கணவர் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சாதிக் பாட்சா மனைவி, ஜனாதிபதியிடம் புகார் அளித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து, சாதிக் பாட்சா மனைவி ரெஹானா பானு ஒரு மனு அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
எனது கணவர் சாதிக் பாட்சாவின் நினைவு நாளுக்கு விளம்பரம் கொடுத்து இருந்தேன். இதைத்தொடர்ந்து எனது கார் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இதை தி.மு.க.வினர் தான் செய்து இருப்பார்கள் என சந்தேகமாக உள்ளது. எனது கணவர் 2ஜி வழக்கில் முக்கிய சாட்சி என்பதால், சில அழுத்தங்கள் காரணமாக தற்கொலை செய்து இருக்கலாம். சாதிக் பாட்சா மரணம் குறித்து விசாரிக்கக்கோரி ஜனாதிபதியிடம் மனு கொடுத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story