காஷ்மீரில் தேர்தல் அதிகாரிகள் மீது கல்வீச்சு : துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி


காஷ்மீரில் தேர்தல் அதிகாரிகள் மீது கல்வீச்சு : துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
x
தினத்தந்தி 12 April 2019 3:24 AM IST (Updated: 12 April 2019 3:24 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் தேர்தல் அதிகாரிகள் மீது கல்வீச்சு. போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.

குப்வாரா, 

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹண்ட்வாரா என்ற இடத்தில் நேற்று மாலை தேர்தல் பணி முடிந்து சென்று கொண்டிருந்த அதிகாரிகள் மீது ஒரு கும்பல் கல்வீசி தாக்கியது. இதில் சில அதிகாரிகள் காயம் அடைந்தனர். நிலைமை மிகவும் மோசமானதால் பாதுகாப்புக்கு சென்ற போலீசார், வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைக்க துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் 4 பேர் காயம் அடைந்தனர். உடனே அவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஒருவர் உயிர் இழந்ததாகவும், மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story