பர்தா அணிந்த பெண்களை சோதிக்க வேண்டும் : பா.ஜனதா எம்.பி. சர்ச்சை கருத்து
பர்தா அணிந்த பெண்களை சோதிக்க வேண்டும் என பா.ஜனதா எம்.பி. கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் பா.ஜனதா எம்.பி. சஞ்சீவ் பாலியன் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘வாக்குச்சாவடிகளுக்கு பர்தா அணிந்து வருபவர்களில் சிலர் 4, 5 முறை வாக்களிக்க வருகிறார்களா என்பதை நீங்கள் எப்படி சோதனை செய்வீர்கள். முகத்தை பார்க்காமல் எப்படி ஒருவரை வாக்களிக்க அனுமதிக்க முடியும். வாக்குச்சாவடியில் பெண் அலுவலர்கள் இல்லையென்றால் ஆண் அலுவலர்கள் அவர்களை சோதனை செய்ய வேண்டும்’’ என்றார்.
அவரது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரசார் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மாநில தலைமை தேர்தல் அதிகாரி வெங்கடேஸ்வரலு கூறுகையில், ‘‘பெண் வாக்காளர்களை அடையாளம் காண பெண் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பர்தா உடையில் வந்தாலும் அவர்களை பெண் அலுவலர்கள் அடையாளம் கண்டு உறுதிப்படுத்துவார்கள்’’ என்றார்.
Related Tags :
Next Story