தேர்தல் நிதி பத்திரத்திற்கு தடை இல்லை, கட்சிகள் விவரங்களை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு


தேர்தல் நிதி பத்திரத்திற்கு தடை இல்லை, கட்சிகள் விவரங்களை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 12 April 2019 11:16 AM IST (Updated: 12 April 2019 12:59 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நிதி பத்திரத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.

புதுடெல்லி,

அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதில், வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்காக, தேர்தல் பத்திர திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. 

இந்த திட்டத்தை எதிர்த்து. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு, உச்சநீதிமன்றத்தில், பொதுநல மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் நடந்தது.

இந்த நிலையில், இன்று இவ்வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தேர்தல் நிதி பத்திரத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து விட்டது. மேலும், தேர்தல் நிதி பத்திர விவரத்தை சீலிடப்பட்ட கவரில் வைத்து மே.30-க்குள் தேர்தல் ஆணையத்திடம் அனைத்து அரசியல் கட்சிகளும் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.

Next Story