தேசிய செய்திகள்

முதல் முறையாக அதிகமான தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜனதா + "||" + BJP set to contest highest number of Lok Sabha seats in party history

முதல் முறையாக அதிகமான தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜனதா

முதல் முறையாக அதிகமான தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜனதா
பா.ஜனதா வரலாற்றில் இப்போதுதான் முதல் முறையாக அதிகமான தொகுதிகளில் போட்டியிட உள்ளது.
17-வது நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் கடுமையான தேர்தல் பிரசராத்தை மேற்கொண்டு வருகின்றன. பா.ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகளும் வெளியாகியது.

ஒடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட கிழக்கு மாநிலங்களிலும் பா.ஜனதா அதிகம் கவனம் செலுத்துகிறது.

இந்த தேர்தலில் பா.ஜனதா கட்சி வரலாற்றில் முதல் முறையாக அதிகமான தொகுதிகளில் போட்டியிட உள்ளது. 2014 தேர்தலில் பா.ஜனதா 428 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. இப்போது இதுவரையில் 408 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.  “இன்னும் 30 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நாங்கள் அறிவிப்போம்,” என பா.ஜனதா கட்சியின் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். 

பா.ஜனதா 2009 தேர்தலில் 433 இடங்களிலும், 2004 தேர்தலில் 364 இடங்களிலும், 1999 தேர்தலில் 339 இடங்களிலும் போட்டியிட்டது. மொத்த நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கை 543 ஆகும்.

டெல்லியில் உள்ளூர் பா.ஜனதா வார்த்தை மோதல் மற்றும் காங்கிரஸ்-ஆம் ஆத்மி வியூகம் நிலுவை காரணமாக பா.ஜனதா 7 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவிக்கவில்லை. உ.பி.யில் 8 தொகுதியிலும், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகளிலும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. பஞ்சாப்பில் 3 தொகுதிகளுக்கும், அரியானாவில் இரு தொகுதிகளுக்கும், ராஜஸ்தானில் ஒரு தொகுதிக்கும் பா.ஜனதா வேட்பாளரை அறிவிக்க வேண்டியது உள்ளது.

ஆந்திரா, தெலுங்கானாவில் கூட்டணியில்லாமல் 42 தொகுதிகளில் பா.ஜனதா தனியாக களமிறங்குகிறது. அசாம், பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் கூட்டணி காரணமாக குறைந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ டெல்லியில் 19-ந் தேதி அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மோடி அழைப்பு
நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி விவாதிக்க டெல்லியில் 19-ந் தேதி அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
2. பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை ஜூலை 6-ந் தேதி தொடங்குகிறது
பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை ஜூலை 6-ந் தேதி தொடங்க உள்ளது.
3. ஜிந்தால் நிறுவனத்திற்கு வழங்கிய நிலத்தை திரும்ப பெறக்கோரி அரசுக்கு எதிராக பெங்களூருவில் பா.ஜனதாவினர் போராட்டம்
ஜிந்தால் நிறுவனத்திற்கு வழங்கிய நிலத்தை திரும்ப பெறக்கோரி அரசுக்கு எதிராக பெங்களூருவில் பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விதானசவுதாவை முற்றுகையிட சென்ற ஆர்.அசோக் உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
4. பா.ஜனதாவின் வளர்ச்சியை தடுக்க மம்தா பானர்ஜி அரசியல் நிபுணருடன் ஆலோசனை
பா.ஜனதாவின் வளர்ச்சியை தடுக்க மம்தா பானர்ஜி அரசியல் நிபுணருடன் ஆலோசனை நடத்தினார்.
5. பீகார் அமைச்சரவை விஸ்தரிப்பு, பா.ஜனதாவிற்கு இடம் வழங்கப்படவில்லை
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.