இந்தியா முழுவதும் ரூ2464.2 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் - இந்திய தலைமை தேர்தல் ஆணையம்


இந்தியா முழுவதும் ரூ2464.2  கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் - இந்திய தலைமை தேர்தல் ஆணையம்
x
தினத்தந்தி 12 April 2019 7:54 PM IST (Updated: 12 April 2019 7:54 PM IST)
t-max-icont-min-icon

இதுவரை ரூ.2,464.2 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மக்களவை தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க, தேர்தல் ஆணையம்  பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, ஆவணமில்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட, நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தியா முழுவதும் மொத்தம் ரூ2464.2 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் ரூ475.95 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story