மத்திய பிரதேசத்தில் பல்கலைக்கழக தேர்வை காலால் எழுதிய மாற்றுத்திறனாளி மாணவி


மத்திய பிரதேசத்தில் பல்கலைக்கழக தேர்வை காலால் எழுதிய மாற்றுத்திறனாளி மாணவி
x
தினத்தந்தி 14 April 2019 10:44 AM IST (Updated: 14 April 2019 2:53 PM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேசத்தில் மம்தா பட்டேல் என்ற மாற்றுத்திறனாளி மாணவி பல்கலைக்கழக தேர்வை காலால் எழுதி உள்ளார்.

மத்திய பிரதேசத்தின் சத்தார்பூர் பகுதியில் வசித்து வருபவர் மம்தா பட்டேல் (வயது 19).  மாற்றுத்திறனாளியான இவருக்கு கைகள் இல்லை.  இதனால் சிறுமியாக இருந்தபொழுது தனது காலால் எழுத கற்று கொண்டார்.

இதன்பின் பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்கும் சென்று படித்துள்ளார்.  இந்த நிலையில், சமீபத்தில் பல்கலைக்கழக தேர்வை எழுதி முடித்து உள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்பொழுது, காலால் எழுதுவதற்கு எனது தந்தை எனக்கு கற்று தந்துள்ளார்.  நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்பொழுது இந்த முறையில் எழுதுவதற்கு சிலர் கேலி செய்தனர்.  ஆனால் நான் இன்று கல்லூரி வரை சென்று படித்து உள்ளேன்.  இது எனக்கு பெருமையாக உள்ளது என தெரிவித்து உள்ளார்.

Next Story