மாட்டிறைச்சி உணவு விற்பனை: இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் 8 பேர் கைது
அசாமில் மாட்டிறைச்சி உணவு விற்பனை செய்த இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கவுகாத்தி அருகே உள்ள மதுப்பூர் வாரச் சந்தைப் பகுதியில் பல ஆண்டுகளாக பிஸ்வாந்த் சாரியலி கிராமத்தை சேர்ந்த சவுகத் அலி (வயது 68) என்ற முதியவர் ஓட்டலில் மாட்டிறைச்சி உணவு சமைத்து விற்பனை செய்து வந்தார். அவரை கடந்த வாரம் ஒரு கும்பல் கொடூரமாக தாக்கியது. கொடூரமாக தாக்கிய கும்பல் சவுகத் அலியை பன்றி இறைச்சி சாப்பிடவும் வற்புறுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் கண்டனங்களுடன் வைரலாக பரவியது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாக கூறியுள்ள போலீஸ், 8 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அசாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனோவால் பேசுகையில், இவ்விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகளை தப்பிக்க விடமாட்டோம். இது மதசார்பற்ற தேசம். அதன் கொள்கையை தொடர்ந்து பராமரிப்போம் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story