உங்களைப்போன்று பதவிக்காக அனுதாப அரசியல் செய்யமாட்டேன், மோடிக்கு மெகபூபா கடும் பதிலடி
குடும்பம் பற்றிய விமர்சனம் செய்த பிரதமர் மோடிக்கு மெகபூபா முப்தி பதிலடியை கொடுத்துள்ளார்.
காஷ்மீரில் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, அப்துல்லா குடும்பத்தையும், முப்தி குடும்பத்தையும் விமர்சித்தார்.
பிரதமர் மோடி பேசுகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை கடந்த 3 தலைமுறைகளாக அப்துல்லா, முப்தி குடும்பத்தார், கொள்ளையடித்துள்ளனர். மாநிலத்தின் எதிர்காலம் கருதி அவர்களை மக்கள் விரட்டியடிக்க வேண்டும். இவர்களை தோற்கடித்தால்தான், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பான எதிர்காலம் அமையும். அவர்களின் நோக்கம் என்னவென்றால் நாட்டை துண்டாடவேண்டும் என்பதுதான். ஆனால் அதற்கு ஒருபோதும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்றார்.
இதற்கு முப்தி முகமது சயீதின் மகளும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், இதுபோன்றதொரு அரசியலை நான் செய்தது கிடையாது. அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக பா.ஜனதா உள்பட அரசியல் எதிர்க்கட்சிகளை அநாகரிகமாக பேசுவது கிடையாது. ஆனால் பிரதமர் மோடியோ அனுதாபம் தேடவும், ஆட்சியை கைப்பற்றவும் தன்னை தேசத்துடன் சமப்படுத்தி பேசுகிறார்.
ஒவ்வொரு இந்தியரும் இந்தியாவிற்குதான் விசுவாசமாக இருக்கவேண்டுமே தவிர பிரதமர் மோடிக்கு கிடையாது. இந்தியா மோடி கிடையாது, மோடி ஒன்றும் இந்தியா கிடையாது. தேர்தலுக்கு முன்பு, குடும்பங்களை விமர்சிக்கும் மோடி, தேர்தலுக்கு பிறகு அதே கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தூது விடுவது ஏன்? ஆட்சியில் இருந்த போது பிரிவு 370 ஐ தேர்வு செய்தது ஏன்? பா.ஜனதாதான், இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மையினரை தண்டித்து இந்தியாவை பிளவுபடுத்த விரும்புகிறது என கடுமையாக பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story