குடும்பம் பற்றிய விமர்சனம்: பிரதமர் மோடிக்கு மெகபூபா முப்தி பதிலடி


குடும்பம் பற்றிய விமர்சனம்: பிரதமர் மோடிக்கு மெகபூபா முப்தி பதிலடி
x
தினத்தந்தி 14 April 2019 10:14 PM IST (Updated: 14 April 2019 10:41 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, அப்துல்லா குடும்பத்தையும், முப்தி குடும்பத்தையும் விமர்சித்தார்.

ஸ்ரீநகர், 

காஷ்மீரில்  தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, அப்துல்லா குடும்பத்தையும், முப்தி குடும்பத்தையும் விமர்சித்தார். அதற்கு முப்தி முகமது சயீதின் மகளும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:–

நான் அனுதாபம் தேடி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக, அரசியல் எதிரிகளை திட்டுவது இல்லை. ஆனால், பிரதமர் மோடியோ அனுதாபம் தேடும் நோக்கத்தில், தன்னை தேசத்துடன் சமப்படுத்தி பேசுகிறார்.

மோடிதான் இந்தியா அல்ல, இந்தியாதான் மோடியும் அல்ல. தேர்தலுக்கு முன்பு, குடும்பங்களை விமர்சிக்கும் மோடி, தேர்தலுக்கு பிறகு அதே கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தூது விடுவது ஏன்? பா.ஜனதாதான், சிறுபான்மையினரை ஒதுக்கிவிட்டு, இந்தியாவை பிளவுபடுத்த விரும்புகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story