ஜார்க்கண்ட்: 3 நக்சல்கள் சுட்டுக்கொலை, சி.ஆர்.பி.எப். வீரர் பலி
ஜார்க்கண்ட்டில் 3 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த மோதலின் போது ஒரு சி.ஆர்.பி.எப். வீரர் பலியானார்.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் பெல்பா காட் வனப்பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு சென்ற சி.ஆர்.பி.எப். வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த மோதலில், சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் மரணம் அடைந்தார்.
நக்சலைட்டுகள் தரப்பில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள், பைப்வெடிகுண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஜார்க்கண்டில் 4 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story