ஜாதி மதங்களை முன் வைத்து ஆதாயம் தேடும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை தேவை : தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்


ஜாதி மதங்களை முன் வைத்து ஆதாயம் தேடும்  வேட்பாளர்கள் மீது நடவடிக்கை தேவை : தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 15 April 2019 12:00 PM IST (Updated: 15 April 2019 12:00 PM IST)
t-max-icont-min-icon

ஜாதி மதங்களை முன் வைத்து ஆதாயம் தேடும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை தேவை என தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

புதுடெல்லி,

 சமூக வலைதளத்தில் அதிக மத அளவிலான பிரசாரத்தை தடுக்க கோரி சுக்கானி என்பவர்  தொடர்ந்த வழக்கில்   ஜாதி, மதங்களை முன் வைத்து ஆதாயம் தேடும்  வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை  என தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. மேலும் வேட்பாளர்களை தீவிரமாக கண்காணிக்கவும் அறிவுரை வழங்கி உள்ளது.

தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் நோட்டீஸ் அனுப்பவுமே அதிகாரம் உள்ளது. அவர்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் இல்லை என தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

Next Story