வாக்களிக்க பிரசாரம் செய்த ராகுல் டிராவிட்டால் மக்களவை தேர்தலில் வாக்களிக்க முடியாது


வாக்களிக்க பிரசாரம் செய்த ராகுல் டிராவிட்டால் மக்களவை தேர்தலில் வாக்களிக்க முடியாது
x
தினத்தந்தி 15 April 2019 11:12 AM GMT (Updated: 15 April 2019 11:12 AM GMT)

தேர்தலில் வாக்களிக்கும்படி பிரசாரம் செய்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் மக்களவை தேர்தலில் வாக்களிக்க முடியாது.

பெங்களூரு,

கர்நாடகாவில் கடந்த வருடம் சட்டசபை தேர்தல் நடந்தது.  இதில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து ஓட்டு பதிவு செய்யும்படி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் 14 தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் வருகிற 18ந்தேதி நடைபெறுகிறது.  இந்நிலையில், இந்திராநகர் பகுதியில் குடியிருந்து வந்த டிராவிட் மற்றும் அவரது குடும்பத்தினர் அஸ்வத்நகர் பகுதிக்கு இடம் பெயர்ந்தனர்.

இதனால் டிராவிட்டின் சகோதரர், அவர்களின் பெயர்களை நீக்கும்படி படிவம் 7ஐ நிரப்பி கொடுத்துள்ளார்.  இதனை தொடர்ந்து டிராவிட், அவரது மனைவியின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.  

இதன்பின் அதிகாரிகள் பலமுறை ராகுலின் புதிய வீட்டிற்கு சென்றுள்ளனர்.  எனினும், ராகுல் டிராவிட் தனது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

முதற்கட்ட தேர்தல் நடைபெறும் பகுதியில் டிராவிட் வசித்து வருகிறார்.  வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நிலையில் டிராவிட் வாக்களிக்க முடியாது.

Next Story