கூகுள், ஆப்பிள் ‘டிக்-டாக்’ செயலியை நீக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது என தகவல்


கூகுள், ஆப்பிள் ‘டிக்-டாக்’ செயலியை நீக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது என தகவல்
x
தினத்தந்தி 16 April 2019 2:36 PM IST (Updated: 16 April 2019 2:36 PM IST)
t-max-icont-min-icon

‘டிக்-டாக்’ செயலியை நீக்குமாறு கூகுள், ஆப்பிள் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

டிக்-டாக் செயலிக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது மதுரை உயர்நீதிமன்றம், நாட்டில் டிக்-டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். டிக்-டாக் செயலியை பயன்படுத்தி எடுக்கப்பட்ட வீடியோக்களை டி.வி. சேனல்கள் ஒளிபரப்பக் கூடாது. குழந்தைகளின் தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்கும் இணையதள சட்டத்தை நம் நாட்டில் அமல்படுத்துவது குறித்து வருகிற 16-ந்தேதி மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிக்-டாக் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியது, ஆனால் நிவாரணம் கிடைக்கவில்லை. 

மதுரை உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து, மதுரை உயர்நீதிமன்றம் விசாரிக்கும் என கூறிவிட்டது.

இந்நிலையில் ‘டிக்-டாக்’ செயலியை நீக்குமாறு   கூகுள், ஆப்பிள் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்-ஸ்டோரில் இருந்து டிக்டாக் செயலியை நீக்குமாறு இரு நிறுவனங்களையும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்-டாக் செயலி நீக்கப்படவில்லை. இதேபோன்று, ஆப்பிள் ஆப்-ஸ்டோரிலும் டிக் டாக் செயலி நீக்கப்படவில்லை. 

Next Story