தேசிய செய்திகள்

தொழில்நுட்ப கோளாறால் கடற்படை ஹெலிகாப்டர் கடலில் மூழ்கியது; 3 வீரர்கள் தப்பினர் + "||" + Naval helicopter sank in the sea with technical discomfort; 3 soldiers escaped

தொழில்நுட்ப கோளாறால் கடற்படை ஹெலிகாப்டர் கடலில் மூழ்கியது; 3 வீரர்கள் தப்பினர்

தொழில்நுட்ப கோளாறால் கடற்படை ஹெலிகாப்டர் கடலில் மூழ்கியது; 3 வீரர்கள் தப்பினர்
தொழில்நுட்ப கோளாறால் கடற்படை ஹெலிகாப்டர் கடலில் மூழ்கியது. அதில் பயணம் செய்த 3 வீரர்கள் தப்பினர்.
புதுடெல்லி,

இந்திய கடற்படை வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய கடற்படை போர்க்கப்பல் அரபிக்கடல் பகுதியில் பாதுகாப்பு மற்றும் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. அந்த கப்பலில் இருந்த சேத்தக் ஹெலிகாப்டரில் நன்கு பயிற்சி பெற்ற வீரர்கள் 3 பேர் கடந்த வாரம் வானில் பறந்து பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஹெலிகாப்டரில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. வீரர்கள் அதனை சரிசெய்ய முயன்றும் முடியவில்லை.


இதனால் அவர்கள் ஹெலிகாப்டரை லாவகமாக கடலில் இறக்கிவிட்டு, அதில் இருந்து பாதுகாப்பாக வெளியேறிவிட்டனர். அந்த ஹெலிகாப்டர் கடலில் மூழ்கிவிட்டது. ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறுக்கு காரணம் என்ன என்பது பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.