வேலையில்லாதவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம், தள்ளுபடியில் மதுபானம்...! அரசியல் கட்சி வாக்குறுதி


வேலையில்லாதவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம், தள்ளுபடியில் மதுபானம்...! அரசியல் கட்சி வாக்குறுதி
x
தினத்தந்தி 17 April 2019 12:53 PM GMT (Updated: 17 April 2019 1:23 PM GMT)

நாங்கள் வெற்றிப்பெற்றால் வேலையில்லாதவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் உதவித்தொகையாக கொடுப்போம் என டெல்லி அரசியல் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.

தேர்தல் வந்துவிட்டாலே அரசியல்கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளிவீசும். ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா? என்ற கேள்வியை மறைக்கும் வகையில் கவர்ச்சி அறிவிப்புக்கள் இடம்பெறும். இப்போது, டெல்லியில் சஞ்கி விராசாத் என்ற கட்சி அளித்துள்ள வாக்குறுதிகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது. அதாவது,  வேலையில்லாதவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை  வழங்கப்படும், 50 சதவீதம் தள்ளுபடியில் மதுபானம் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களுக்கு ஈகை திருநாளின் போது ஒரு ஆடு வழங்கப்படும். பிஎச்டி வரையில் கல்வி இலவசம். மாணவர்களுக்கு இலவச பஸ்-பாஸ் வழங்கப்படும். தனியார் பள்ளிகளில் கட்டணம் கிடையாது. அனைவருக்கும் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். பெண் குழந்தைகள் பிறந்தால் ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும். பெண்களின் திருமணத்திற்கு ரூ.2.5 லட்சம் வழங்கப்படும்.

வயதானவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் பென்ஷனாக வழங்கப்படும். ஒரு லட்சம் வரையில் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் இலவசமாக  வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மே 12 ந் தேதி தோ்தல் நடைபெறுகிறது.

Next Story