ரெயில் நிலையத்தில் மேற்கூரை விழுந்து பயணி பலி


ரெயில் நிலையத்தில் மேற்கூரை விழுந்து பயணி பலி
x
தினத்தந்தி 18 April 2019 2:06 AM IST (Updated: 18 April 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் நிலையத்தில் மேற்கூரை விழுந்த விபத்தில் பயணி ஒருவர் பலியானார்.

கத்தியார்,

மேற்கு வங்காள மாநிலம் மால்டா மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது குலு (வயது 40). நேற்று முன்தினம் இரவு அவர் பீகார் மாநிலம் கத்தியார் ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக நடைமேடையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது பலத்த காற்று வீசியது. இதனால் ரெயில் நிலையத்தில் இருந்த ‘ஆஸ்பெஸ்டாஸ்’ பலகையால் ஆன மேற்கூரை முகமது குலு மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

Next Story