ஓட்டு போடுவதை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியீடு 4 பேர் மீது வழக்குப்பதிவு


ஓட்டு போடுவதை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியீடு 4 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 18 April 2019 10:29 PM IST (Updated: 18 April 2019 10:29 PM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநிலம் உஸ்மானாபாத் நாடாளுமன்ற தொகுதியில்வாக்குப்பதிவு நடந்தது.

அவுரங்காபாத்,

மராட்டிய மாநிலம் உஸ்மானாபாத் நாடாளுமன்ற தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடந்தது. ஒரு வாக்குச்சாவடியில் ஒருவர், தான் ஓட்டு போடுவதை வீடியோ எடுத்தார். அப்போது, தேசியவாத காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள் என்று பேசினார்.

இந்த வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டார். சற்று நேரத்தில் அது ‘வைரல்’ ஆனது. அந்த நபர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார்.

தேர்தல் அதிகாரி கவனத்துக்கு இச்சம்பவம் தெரிய வந்ததும், அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இச்செயல், தேர்தல் விதிமீறல் என்பதால், அவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பேஸ்புக்கில் வீடியோ நீக்கப்பட்டது.

Next Story